மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து மனிதக் கொலைகள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகிய மூவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, லண்டனில் வசிக்கும் மொஹமட் பாய்ஸுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








