சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம் எனும் தொனிப்பொருளில்
கைத்தொழில் அமைச்சின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து தைப்பொங்கலை முன்னிட்டு நடாத்திய விற்பனைக் கண்காட்சி மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் அமைந்துள்ள Bridge மார்க்கெட்டில் இடம் பெற்றது.
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆகிய உ.உதயகாந்த் தலைமையில் இடம் பெற்ற விற்பனைக் கண்காட்சியில் கைத்தொழில் அமைச்சின் (NEDA) மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி.சிவகுமாரி செல்வராசா, பிரதேச செயலகங்களின் கடமையாற்றும் தொழில் முயற்சி பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும்
மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி, ஆலோசகர்கள் உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியிருந்தனர்.
குறித்த விற்பனைக் கண்காட்சியானது கடந்த (10) திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டு தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.