Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளின் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி

கிளின் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவினால் “அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்” எனும் பிரகடனத்துக்கு அமைய செயற்படுத்தப்படும் கிளின் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) என்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக “நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தூய்மையான இந்துக்கல்லூரி (Pure BHC) என்னும் ஒரு சுத்தமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஒரு படி!” என்ற செயற்திட்டம் மட்டு இந்துக்கல்லூரியில் இன்று (17) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அந்த வகையில், Pure BHC (தூய்மையான இந்துக்கல்லூரி) செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை வளாகம், பாடசாலையை அண்டியுள்ள பிரதேசங்கள் என்பன கல்லூரியின் சுகாதாரக் கழகம் (Hindu Health Care Club), சுற்றாடல் படையணி, சாரணர் படையணி, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் ஆகியோரினால் சுத்தம் செய்யப்பட்டன.

இதன் போது குறித்த திட்டத்தின் ஒருங்கணைப்பாளர்கள் தெரிவிக்கையில்,

கிளின் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka), தூய்மையான இந்துக்கல்லூரி (Pure BHC) இனூடாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆரம்பித்த இந்த மாபெரும் மாற்றம், பாடசாலை மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் நிச்சயம் சுத்தமான இலங்கையை உருவாக்கமுடியும்.

தூய்மையான இந்துக்கல்லூரி (Pure BHC) திட்டத்தின் பிரதான நோக்கங்களாக,
மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பொறுப்புணர்வை வளர்க்கும் வழியில், ஒரு புதிய சுத்தமான மற்றும் நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்குவதாகும். கல்லூரியில் கற்கும் 1200 மாணவர்களினூடாக 1200 குடும்பங்களுக்கும், அக் குடும்பங்களினூடாக அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் நிலைபேறான ஆரோக்கியமான சுகாதாரமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதாகும்.

தூய்மையான இந்துக்கல்லூரி (Pure BHC) இன் எதிர்கால திட்டங்களாக,
சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து ஏற்றுக்கொள்ளும் பிரச்சாரங்கள்,
பாடசாலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் இயக்கங்கள், சூழல் சீர்திருத்தம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் குறித்து செயற்பாட்டுகள், மரங்களை நடுவோம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய முயற்சிகள், சமூகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள், பொலித்தீன் பாவனை குறைந்த பாடசாலையை (Polythene Less BHC) உருவாக்கி அதனூடாக எதிர்காலத்தில் பொலித்தீன் பாவனை அற்ற இந்துக் கல்லூரியினை (Polythene Free BHC)உருவாக்கல் என்பனவாகும் என தெரிவித்தனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு