2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 11 அமைப்புகளில் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகியவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்தார்.
இருப்பினும், இந்த மாத ஆரம்பத்தில், பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து அமைப்புகளின் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது
- United Thawheed (Thowheedh) Jamma’ath (UTJ)
- Ceylon Thawheed (Thowheedh) Jamma’ath (CTJ)
- Sri Lanka Thawheed (Thowheedh) Jamma’ath (SLTJ
- All Ceylon Thawheed (Thowheedh) Jamma’ath (ACTJ)
- Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya (JASM)