Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று அமுலுக்கு வருகிறது காஸா – இஸ்ரேல் போா் நிறுத்த ஒப்பந்தம்; கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சா்அறிவிப்பு

இன்று அமுலுக்கு வருகிறது காஸா – இஸ்ரேல் போா் நிறுத்த ஒப்பந்தம்; கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சா்அறிவிப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாக கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சா் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

காஸா போா் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 12 மணி) அமுலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகளிடமிருந்து அறிவிப்புகள் வரும்வரை அவா்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை செயல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடா்ந்து கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டும் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (18) கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. இஸ்ரேலிலும் யேமனின் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் வீசிய ஏவுகணைகளால் எச்சரிக்கை ஒலி தொடா்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

இன்று ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததும் காஸாவிலும் இஸ்ரேலிலும் அமைதி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்த அமுலாக்கத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க இருக்கிறாா்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவாா்கள்.

ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோா், நோய் வாய்ப்பட்ட இராணுவம் சாராதவா்கள், பெண்கள், குழந்தைகள், பெண் இராணுவத்தினா் ஆகியோா் அடங்குவா்.பிணைக் கைதிகளாக உள்ள ஆண் இராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படுவாா்கள் என்று முன்னா் கூறப்பட்டது.

இருந்தாலும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறும்வரை எஞ்சிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படமாட்டாா்கள் என்று ஹமாஸ் தெரிவித்துவிட்டது.

இந்த கைதிகள் பரிமாற்றம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் (இலங்கை நேரப்படி மாலை 7.30 மணி) தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தின்போது முதலில் ஹமாஸ் பிடியிலிருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகே பலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.

இந்த நிலையில், இஸ்ரேலின் முழு அமைச்சரவையும் ஒப்பந்தத்துக்கு சனிக்கிழமை இறுதி ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து இன்று அமுலுக்கு வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்
செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்

June 29, 2026
உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு
செய்திகள்

உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு

June 29, 2026
நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்
செய்திகள்

நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்

June 29, 2026
கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது
காணொளிகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

June 28, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 28, 2026
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

June 28, 2026
Next Post
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு