Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு; இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல் களை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் முன் னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்
அரசியல்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

August 14, 2026
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!

August 14, 2026
அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்
செய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
Next Post
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு