Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

2 weeks ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரின் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 6 பேரையும் இந்த வழக்கு முடியும் வரை வைத்தியர் பற்றி முகநூல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு தடைவிதித்தும், குறித்த 6 போரையும் எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் நியமிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் கலாசார உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன், அவரது குடும்பம் தொடர்பாக அவதூறாக சமூக வலைத்தளங்கள் முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவிடப்பட்டன.

இந்த அவதூறு தொடர்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின் கீழ் வைத்தியர் கு.சுகுணன்; நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகிய சமர்பணம் முன்வைத்தனர். இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா என்ற தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (28) திறந்த நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரையும் வைத்தியர் சுகுணன் பற்றி அவரது குடும்பம் பற்றியோ முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வழக்கு முடியும் வரை பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் 6 பேரும் சமூகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளையிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!
செய்திகள்

வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

October 10, 2026
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!
செய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

October 10, 2026
கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

October 10, 2026
கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!
செய்திகள்

அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!

October 10, 2026
Next Post
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு