திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத் சிறிநேசன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதற்கு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.












