Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

54 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளை மாவட்டத்தின் ஊவபரணகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலகொல்லை தோட்டத்தில், மண்சரிவு அதி உயர் அபாய வலயத்தில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் முன்னெடுக்கப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்ட 10,000 வீடுகள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (29) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக 13 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் கௌரவமான வீட்டு வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு வீட்டுக்கு இந்திய அரசாங்கம் 28 இலட்சம் ரூபாவும், மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசாங்கம் 4 இலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வீட்டிற்கும் மொத்தமாக 32 இலட்சம் ரூபா பெறுமதியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு