கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28.07.2023) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலையை அவதானிகின்ற வேளையில், பொது மக்கள் இதற்கான பூரண ஆதரவினை வழங்கியிருந்த போதும் வர்த்தக சங்கங்கள் தங்கள் ஒத்துழைப்புகளை வழங்காமல் வழமைபோல் தங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாவுள்ளது.
நியாயமான கோரிக்கைக்கு நீதிவேண்டி முன்னெடுக்கப்படுகின்ற கதைவடைப்பிற்கு வர்த்தக சங்கங்கள் தங்கள் ஒத்துழைப்பினை வழங்காமை உண்மையில் கவலையளிப்பதுடன் இன்றைய பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பிற்கு பாரிய தடையாகவும் உள்ளது.