களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வாதுவ மற்றும் மொரந்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








