Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

52 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்தும், ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்

குறித்த பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் இல்லாத நிலையில் அவரது தந்தையார் 2 வதாக 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவரை திருமணம் முடித்துக் கொண்டார். இவர் கணவரின் முதல் மனைவியின் 9 வயது சிறுமியை கடந்த 2015 மார்ச் 10 ம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10 ம் திகதியான ஒரு வருட காலத்தில் தொடர்ச்சியாக இரும்பு கரண்டியால் சூடு வைத்து மற்றும் வாயில் துணியை அடைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சித்தியை 2016 பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு 2022ம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி தொடர்ந்து வாதாடி வந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் 2026 ம் ஆண்டு ஒக்டோபர் 13 திகதி (2026-10-13) இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் குறித்த தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
Next Post
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு