Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)

போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)

2 years ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அர்ச்சுனா இன்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்ற அமர்வுக்காக கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிறகும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக அவரது வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

இதன்போது, ஆவணங்களை வழங்க மறுத்து, போக்குவரத்து கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

@battinaatham

போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி) மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #battinaatham #srilanka #batticaloa #anurakumaradissanayaka #archuna#srilankaparliament🇱🇰#hariniamarasuriya

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்யேக பஸ் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்யேக பஸ் சேவை ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு