Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலையில் மீண்டும் நெல் கொள்வனவினை ஆரம்பிக்குமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையினால் குறித்த நெல் களஞ்சியசாலை சகல வசதிகளுடனும் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டது.

குறித்த களஞ்சியசாலையின் ஊடாக கடந்த காலத்தில் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வந்தபோதிலும் சில காலமாக நெல் கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த களஞ்சியசாலையானது காடுகள் நிறைந்ததாக காணப்படுவதுடன் அங்குள்ள கட்டிடங்களும் உடைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட்டு இதுவரையில் அரிசியாக்கப்படாமல் சுமார் 25க்கும் அதிகமான நெல்மூடைகள் இங்கு தங்கும் விடுதியில் உள்ள அறைகளில் கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளது.

இந்நிலையில், இன்று நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த நெல்மூடைகள் அரிசியாக்கப்படாமல் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் இதன்போது கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், க்ளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் இந்த நெல் களஞ்சியசாலையினையும் கருத்தில் கொண்டு இதனை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
Next Post
யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

யாழ் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு