வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரை வாழைச்சேனை பொலிஸார் நேற்றிலிருந்து வலைவரித்து தேடி வந்த நிலையில், இன்று (23) முற்பகல் 11.20 மணியளவில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவைச்சேர்ந்த திரு தினேஷ் (8656) அவர்களுக்கு கிடைப்பெற்ற தனிப்பட்ட இரகசியத்தகவலின் அடிப்படையில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள இடத்தினை அடையாளங்காட்டியுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன்இ மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.