Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள்

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். பொது நூலகத்துக்கு அருகாமையில் திறந்தவெளி அரங்கு அமைந்திருந்த யாழ்ப்பாண மாநகர சபைக்கு உரித்தான காணியில் அதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாநகர சபையின் நிதி வசதியீனத்தைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யப்படாமல் சில முக்கிய அரசியல் காரணங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்தக் கட்டடம் அதன் முழுமையான அம்சங்கள் ஆராயப்படாமல் நிர்மாணிக்கப்பட்டமையே இந்த நிலை உருவாக காரணமாகியது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சகலரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறிருக்கையில் கடந்த (18)ஆம் திகதி சனிக்கிழமை இதன் பெயர் “திருவள்ளுவர் கலாசார மையம்” என மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும், இலங்கைக்கான இந்திய தூதுவரும் வேறு சிலரும் கலந்துகொண்ட சந்திப்பில் அதற்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்த நடவடிக்கை பற்றிய அறிதல் எதுவும் இந்த மண்ணின் அரசியல் தலைவர்களுக்கோ பிரதிநிதிகளுக்கோ சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பது எமக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இந்த நடவடிக்கை பற்றிய ஆழமான அதிருப்தி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டு, இது ஒரு இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையேயான உணர்வுபூர்வமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதனால் விபரமாக அதிருப்தியை பதிவு செய்வதை தவிர்க்கிறோம். தெய்வப் புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு நாமாகவே இந்த மண்ணில் பல இடங்களில் உருவச்சிலைகள் அமைத்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல ஔவைக்கும், மாகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் நாமாக இங்கு சிலை எடுத்தவர்கள் நாங்கள். தெய் வப் புலவர் திருவள்ளுவருக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

இப்படியிருக்கையில் இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும்.

இது இந்தியாவுக்கும் எமக்குமிடையேயான நல்லுறவில் ஆழமான குழி யாக அமைந்து விடக்கூடாது என நாம் திடமாக நம்புகிறோம்.

யாழ்ப்பாணம் என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும்.

எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள் கிறோம். மேலும் இந்த புதிய பெயர் மாற்றத்திற்கான அறிவித்தலில் கூட தமிழ்மொழி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசின் அரசமைப்பின் 16 ஆவது இலக்க திருத்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகும்.

சிங்களம் அடுத்த நிர்வாக மொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்பது அரசியலமைப்பின் ஏற்படாக இருக்கையில் சிங்கள மொழியில் முதலாவதாகவும் ஆங்கில மொழியில் இரண்டாவதாகவும் தமிழ் மொழியில் மூன்றாவதாகவும் பெயர்ப் பலகை எழுதப்பட்டிருப்பது இந்த ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்பே நல்லுறவைப் பாதிப்பின்றி பேணும் பொருட்டு இந்த மீளாய்வுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றாம் என்றுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச சட்ட அமைப்பு எதிர்ப்பு!

June 27, 2026
‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

‘சடலத்தை வைத்தியசாலை அருகே போட்டுவிடுங்கள்’; பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்!

June 27, 2026
பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!
செய்திகள்

பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026
Next Post
மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்; பிமல் ரத்நாயக்க

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்; பிமல் ரத்நாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.