கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் அமைச்சரவைக்கு கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டமை தொடர்பாக அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கரி ஆனந்தசங்கரியின் நியமனம் அவரது பொதுச் சேவைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும்.
உலகில் பலம் வாய்ந்த நாடு ஒன்றில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அவையில் முதன் முறையாக ஒரு ஈழத் தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது.
ஈழத் தமிழ் தேசம் கரிக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவரை வாழ்த்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.