அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட் டுள்ளன.வெள்ளை மாளிகையில் இருந்து அவர் எத்தகைய சர்ச்சைக்குரிய பத்திரங்களை வெளியே கொண்டு சென்றார் என்பதை மறைக்க இரண்டாவது ஊழியர் ஒருவர் உதவினாரென அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
இரகசிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த புளோரிடா வீட்டின் சிசிரிவி வீடியோக்க அழைத்து, சாட்சியங்களை அழித்ததாக ட்ரம்ப் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.ட்ரம்ப் மீது இதுவரை மொத் தம் 40 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பு தமது வழக்கறிஞர்கள் நீதித்துறை அதிகாரிகளைச் சந்தித்தனரென்று ட்ரம்ப் கூறினார்.2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்தது தொடர்பான விசாரணை அது என்பது குறிப்பிடத்தக்கது.