அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால தெரிவித்திருந்தார்.
இன்று (20) பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த அரசியல்வாதியின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.