இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை நாம் தொடர்பு கொண்டபோது, ரமால் சிறிவர்தனவின் இராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைவர் பதவியை இராஜினாமா செய்த இரண்டாவது நபர் ரமால் சிறிவர்தன என்று தெரிவிக்கப்படுகிறது.