1,000cc-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அதிசக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை விளையாட்டு உள்ளிட்ட விசேட தேவைகளுக்காக அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இவ்வகை மோட்டார் சைக்கிள்களை விசேட நிபந்தனைகளின் கீழ் பந்தயத் தடங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் பயன்படுத்த அனுமதிப்பது மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.







