Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் காலியான மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தமது தயாரிப்புகளின் விலைகளை அதிகரித்துள்ளன. இந்தப் புதிய விலை மாற்றம் நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணாடிப் போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மதுபான உற்பத்தியாளர்களுக்கு மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, 750 மில்லிலீற்றர் காலிப் போத்தலின் விலை 160 ரூபாவாகவும், 375 மில்லிலீற்றர் போத்தலின் விலை 140 ரூபாவாகவும், 180 மில்லிலீற்றர் போத்தலின் விலை 109 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, காலிப் போத்தல்களை மீளப் பெற்றுக்கொள்ளும் மதுபான விற்பனை நிலையங்களில் அறவிடப்படும் வைப்புத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 750 மில்லிலீற்றர் போத்தலுக்கு 60 ரூபாவாக இருந்த வைப்புத் தொகை தற்போது 100 ரூபாவாகவும், 375 மில்லிலீற்றர் போத்தலுக்கு 40 ரூபாவாக இருந்த தொகை 70 ரூபாவாகவும், 180 மில்லிலீற்றர் போத்தலுக்கு 20 ரூபாவாக இருந்த தொகை 30 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் ‘கல்’ (Gal) மதுபானத்தின் 750 மில்லிலீற்றர் போத்தலின் விலை, 100 ரூபா வைப்புத் தொகையையும் உள்ளடக்கி தற்போது 3,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்தத் தொகையில் 360 ரூபா மதுபான விற்பனை நிலையங்களுக்கான பங்காகவும், சுமார் 611 ரூபா மதிப்புக்கூட்டு வரியாகவும் (VAT) செல்வதாக உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை, காலிப் போத்தல்களை மீளப் பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான மேலதிக செலவுகளை மதுபானத்தின் விலையுடன் சேர்த்து நுகர்வோரிடம் அறவிடத் தீர்மானித்துள்ளன.

மதுவரி அதிகரிக்கப்படாத நிலையிலும், போத்தல்களின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மேலதிக செலவுகளை நுகர்வோரிடம் அறவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!
செய்திகள்

ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!

November 4, 2026
அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
Next Post
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு