Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள், தாய்-தந்தையர்கள் இருந்தும், கல்வி நோக்கத்திற்காக அவர்களை பிரித்து, சிறுவர் இல்லங்களில் காணப்படும் நிலை மாற்றப்படவேண்டும். எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்படவேண்டுமே தவிர, முதல் தெரிவாக இருக்க கூடாது என கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி றிவானி றிபாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இதில் கலந்து கொண்ட சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி றிவானி றிபாஸ் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் 51 சிறுவர் இல்லத்தில்1204 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு சிறுவர்களை பாதுகாத்து, பராமரித்து, சரியான நடத்தைகளை கண்காணித்து, நற்பிரைஜகளாக சமூகத்தில் இணைப்பதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரசபை சேவையாறிக் கொண்டிருக்கின்றது.

தாய் தந்தைகளை இழந்த மற்றும் கைவிடப்பட்ட சிறுவர்களை பராமரிப்பது பிரதான நோக்கமாக இருந்த போதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான சிறுவர்கள் கல்வி நோக்கத்துக்காக பெற்றோரின் அன்பில் இருந்து பிள்ளைகளைபிரித்து, சிறுவர் இல்லங்களில் இனைக்கப்படும் இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

குறிப்பாக 5ம் ஆண்டு அல்லது 9ம் ஆண்டு பிள்ளைகளுக்கு கல்வி வழங்க முடியாது மற்றும் போக்குவரத்து போன்ற பிரச்சனைகள் காரணமாக சிறுவர் இல்லங்களில் இனைப்பதற்கு அனுமதிகோரியுள்ளனர். அத்துடன் பிள்ளைகளை இல்லங்களில் இணைப்பது இறுதியான தீர்வாக காணப்படவேண்டுமே, தவிர முதல் தெரிவாக இருக்க கூடாது என்றார்.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் முரளிதரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான சுபிட்சமாக எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து சிறார்களை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு வழங்கல் , சிறார்களுக்கானஉணவு வழங்கள், குருஅபிமணி வேலைத்திட்டங்கள், பாடசாலை இடை விலகள், இளவயது திருமணம், சிறார்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முற்தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன் போது வழங்கப்பட்டது.

சிறார்களை மேம்படுத்துவதற்கும், பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறார்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை சமூகமாக கையாள்வதற்கு தேவையான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.