Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்பு

பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்; பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள்

நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, பெப்ரவரி 05ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 06ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 வரை புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரு வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் சபாநாயகருக்குக் கிடைக்கப் பெறின், குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை 2025.02.06ஆம் திகதிக்கு நியமிக்கப்பட்ட அலுவல்களுடன் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி; வெளியான தகவல்

மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி; வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.