உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களின் விலைத் திருத்தக் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதலால் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருளின் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ளதாக LIOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தற்போதைய விலைகளில் மேலதிக இறக்குமதிச் செலவைச் சேர்க்காமல் CPC எரிபொருளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உலகச் சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள் விலைகளை வழக்கமான கால இடைவெளிகளில் திருத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








