Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2025

தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி – 2025

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (28) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் அவர்களின் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜா மற்றும் கோறளைப்பற்று வடக்கு கணக்காளர் திரு சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்கள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதோடு அரையிறுதி போட்டிக்கு கோறளைப்பற்று, மண்முனை தென் எருவில்பற்று, கோறளைப்பற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னேறின.

இறுதிப்போட்டியில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) ஆகிய பிரதேச செயலகங்கள் போட்டியிட்டதுடன், கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகம், 2025 ம் ஆண்டின் பிரதேச செயலாளர் கிண்ணத்தை சுவீகரித்தது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் 3ம் இடத்தினையும், கோறளைப்பற்று பிரதேச செயலகம் 4ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

வெற்றியீட்டிய அணிகளுக்கான கிண்ணங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தொடரின் சிறந்த ஆட்டநாயகன் மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் போன்ற விருதுகளும், பங்கேற்ற அனைத்து அணிகளுக்குமான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு த. நிர்மலராஜ் , நிருவாக உத்தியோகத்தர் திரு வே. தேவேந்திரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பெரியகல்லாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு