Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசின் மீது முன்வைக்கப்படும் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றஞ்சாட்டினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிலக்கரி கொள்வனவு மோசடி, கொள்கலன் விவகாரம் மற்றும் டொலர் நெருக்கடி தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து நாட்டில் புதிய பேசுபொருளை உருவாக்கி அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க முற்படுகின்றனர்.

நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ரக்பி போட்டி விவகாரத்தில் போட்டி நடைபெற்றதா, அதனை ஏற்பாடு செய்தவர்கள் யார், பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது போன்ற ஆரம்பகட்ட உண்மைகளை விசாரிக்காமல் தனிநபர்களை இலக்கு வைத்துச் செயற்படுவதில் நியாயம் இல்லை.

ராஜபக்‌ஷக்களைக் கைது செய்வதன் மூலம் எங்களது அரசியல் நடவடிக்கைகளை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. அரசின் ஊழல்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

சட்டம் அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாகச் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக மாத்திரம் சட்டம் வளைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழுதடைந்த வெங்காயம் விற்பனை; சம்மாந்துறையில் வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!
செய்திகள்

பழுதடைந்த வெங்காயம் விற்பனை; சம்மாந்துறையில் வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!

November 19, 2026
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!

November 19, 2026
காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
செய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

November 19, 2026
மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!

November 19, 2026
இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்
செய்திகள்

இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்

November 19, 2026
கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி
செய்திகள்

கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி

November 19, 2026
Next Post
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு