அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.
தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.