Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கிலங்கையின் மிக பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று (02) நடைபெற்றது.

தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து, வருவோருக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.

நேற்று முன்தினம் மாலை வரையில் என்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களினால் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன.

நேற்று காலை விசேட ஹோமபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, மலர் தூபி, பிள்ளையார் ஆலயங்களுக்கு சென்று அபிசேகம் செய்யப்பட்டதுடன், பிரதான தூபி மற்றும் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் அபிசேகம் செய்யப்பட்டன.

இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, மூலமூர்த்தி நாயகியாகவுள்ள வடபத்திரகாளியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று, அடியார்கள் வழிபடும் வகையில் தசமங்கல தரிசனம் செய்யும் வழிபாடும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 8, 2026
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

August 8, 2026
வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
செய்திகள்

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

August 8, 2026
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
Next Post
இலங்கையில் கே.ஜி.ஃஎப் திரைப்பட வில்லன்

இலங்கையில் கே.ஜி.ஃஎப் திரைப்பட வில்லன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு