அதிகமான படைப்பாளிகள் தங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில், யூடியூப் அதன் அம்சத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அம்சம், தற்போது அழைப்பிதழின் அடிப்படையில் கூடுதல் பயனர்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
சமூகம் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய படைப்பாளர்களுக்கு புதுப்பிப்புகள், கருத்துக்கணிப்புகள், படங்கள் மற்றும் உரை அடிப்படையிலான தொடர்புகளை இடுகையிட குறித்த மேம்பாடு உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் ரசிகரகளுடனான ஆழமான ஈடுபாட்டை வளர்க்கும் என எதிர்பார்ப்பதாக யூடியூப் அறிவித்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-180.png)
இது படைப்பாளிகள் தங்கள் சமூகத்திற்குள் விவாதங்களை நிர்வகிக்கவும் தொடர்புகளை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.
இதற்கு தகுதியுள்ள பயனர்கள் இந்த அம்சத்தை அணுகுவது குறித்த அறிவிப்புகளைப் பெறுவார்கள் என்றும், அதை அவர்களின் விருப்பப்படி இயக்கவோ அல்லது முடக்கவோ முடியும் என்றும் யூடியூப் உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, உள்ளடக்கப் பகிர்வு மற்றும் பார்வையாளர் தொடர்புகளில் அதன் வளர்ந்து வரும் பங்கிற்கு ஏற்ப, யூடியூபி தற்போதுள்ள சமூகங்களின் தாவலை ‘பதிவுகள்’ என்று மறுபெயரிடுகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-181.png)
இந்த அம்சம் தற்போது கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது.
மேலும், கையடக்க சாதனங்களில் உள்ளடக்க ஈடுபாட்டை மேம்படுத்துவதில் யூடியூப் தமது கவனத்தை வலுப்படுத்தி வருகிறத.
இந்த நடவடிக்கை படைப்பாளர்களுக்கு அதிக ஊடாடும் கருவிகளை வழங்கும் என்றும், காணொளி உள்ளடக்கத்திற்கு அப்பால் தங்கள் பார்வையாளர்களுடனான உறவை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.