மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் (4) இரவு இடம்பெற்றுள்ளது. சகோதரங்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பு சண்டையாக மாறியது அதனை விலக்க சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுவதுடன் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-224.png)
மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-225.png)
மேலும் வாழைச்சேனை நீதிமான் நீதிபதி சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதும் உடல் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்குஅனுப்பப்பட உள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.