Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம்; வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு முன்னைய அரசாங்கங்கள் தான் காரணம்; வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல பகுதிகளில் தொடர்ந்தும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடையினால் தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் மற்றும் பிற வணிக நிலையங்களின் செயற்பாடுகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

மின்சார விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகள் செயலிழந்ததால் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த அறிக்கையில்,

“பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறிய முந்தைய அரசாங்கங்களின் குறுகிய பார்வை கொண்ட செயல்களாலும், தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத மோசமான வழிகாட்டுதலாலும் இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

இருப்பினும், இந்த நிலைமைக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, இது மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

மின் விநியோகத் தடையால் பெரிதும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் மின்சார அமைப்பை மீட்டெடுப்பதில் கடினமாக உழைத்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.”

பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும், நேற்றைய தினம் உப மின்நிலையத்தில் குரங்குகள் எவையும் மோதவில்லை என பாணந்துறை உப மின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை முதல் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நேற்று மாலை 5.30 அளவில் சுமார் 6 மணிநேரத்தின் பின்னர் முழுமையாக வழமைக்குத் திரும்பியிருந்தது.

எனினும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு

சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.