Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

பாசுபதேசுவரர் ஆலயத்தில் பாரம்பரிய பொங்கல் விழா; கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

1 year ago
in செய்திகள்

அம்பாரை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு நேற்று முன்தினம் (08) நடைபெற்ற கிழக்கு மாகாண பொங்கல் விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர மற்றும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் தலைமையில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ் வருட மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இடம்பெற்றது.

பாராம்பரிய முறையில் நெல் அறுவடை இடம்பெற்றதுடன், மாட்டு வண்டில்கள் மூலமாக கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இடம்பெற்ற பூஜையினை தொடர்ந்து கலாசார பாரம்பரிய நாட்டிய நடன நிகழ்வுகளுடன் அதிதிகள் ஊர்வலமாக பாசுபதேசுவரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் பின்னராக பாரம்பரிய முறையில் நெல்லில் இருந்து அரிசி எடுக்கப்பட்டு, பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பின்னராக சமய தலைவர்களின் ஆசி உரை இடம்பெற்றதனை தொடர்ந்து, சிறந்த காளை மாடு தெரிவு, சிறந்த விவசாயிகள், சிறந்த மாட்டு வண்டில்கள், சிறந்த பசு வளர்ப்பு, பண்ணையாளர் தெரிவுகள், சிறந்த பொங்கல் தெரிவுகள் இடம்பெற்று, அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், அலங்கரிக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் பல்வேறு கலாசார கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேநேரம் நூலகங்களுக்கு நூல்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அதிதிகள் பாசுபதேசுவரர் ஆலய நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் மாகாண கால்நடை வைத்திய பணிப்பாளர் நசீர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவி செயலாளர் ஆர்.சுபாகர், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், இராணுவ உயர் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள், ஆலயங்கள், பொது அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆளுநர் தமிழில் இங்கு உரையாற்றுகையில், வெறுமனே யூரிப்பில் பாரம்பரிய பொங்கல் விழாவை பார்க்கும் இளைஞர்களுக்கு இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளது.

இன்றைய இளம் சமூகம், எவ்வாறு பொங்கல் விழா இருந்தது எனவும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் எல்லோரும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பதையும் அறிந்திருக்கமாட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களிடம், கந்தளாயில் கல்வி கற்ற நான் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்று கூறினால் அப்படி இருந்தீர்களா? என ஆச்சரியமாக கேட்கின்றனர் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

July 30, 2026
மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!
செய்திகள்

மின் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு; மின்சார சபைக்கு இழப்பீடு!

July 30, 2026
கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!
செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

July 30, 2026
சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
Next Post
அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மின்வெட்டு

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மின்வெட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.