இலங்கை மத்திய வங்கியில், வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக குறிப்பிட்டு மூன்றாம் தரப்பிலிருந்து வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
அத்துடன், மத்திய வங்கி, மூன்றாம் தரப்பு தளங்களில் வேலை வாய்ப்புகளை இடுகையிடுவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்து அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புகளும் அதன் வலைத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேவையில் மாத்திரமே கிடைக்கும் என்று மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-386.png)
அதேவேளை, மோசடிகளைத் தவிர்க்க இந்த அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் வேலை இடுகைகளை சரிபார்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.