‘பாடசாலைக்கு மத்தியஸ்த்தம்’ என்ற கருப்பொருளில் மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்த கருத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு நிகழ்வானது ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று முன்தினம் (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக் குழுவானது, கல்வி அமைச்சுடன் இணைந்து எஸ்.டி.ஈ.ஆர் அமைப்பின் நிதி அனுசரனையில் இவ் 3 நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-446.png)
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மத்தியஸ்த உத்தியோகத்தர் திருமதி ஜீவிதா நதிசன் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் சியாகுல், கல்லூரி அதிபர் கலீம் இஸ்காக், மாவட்ட மத்தியஸ்த இணைப்பாளர் எம்.ஜ.எம்.அஜீன், உட்பட பாடசாலை மத்தியஸ்த செயற்திட்ட கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி பிறின்சியும் கலந்து கொண்டார்.
இவ் மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக மத்தியஸ்த உத்தியோகத்தர்களான ஆசாத், லோஜினி மற்றும் நிராஜ் தேவா ஆகியோர்கள் பங்கு பற்றி நடாத்தினர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-447.png)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் செயலமர்விற்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஆனது தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_090144_3-2-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_091511_8-2-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_084602_352-2-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_084752_204-2-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_090346_0-2-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/IMG_20250210_090119_7-2-1024x576.jpg)