Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொகுக்கப்படவேண்டும்; மகளிர் அணி கோரிக்கை

பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொகுக்கப்படவேண்டும்; மகளிர் அணி கோரிக்கை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்தொதுக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (10) கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி. சுசிகலா அருள்தாஸ் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அக் கோரிக்கையில் பெண்களுக்கு அரசியல் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியல் துறையில் இன்றியமையாததாக அமையவேண்டும், என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததன் விளைவாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் 25 பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையிலும், பெண் பிரதிநிதித்துவங்கள் பல வட்டாரங்களில் வெற்றிபெற முடியாமல் உள்ள சூழலே காணப்படுகின்றது.

இந் நிலையினை மாற்றி பெண்களுக்கான வட்டாரங்கள் குறித்த ஒதுக்கப்பட வேண்டும் அவ்வாறு குறித்தொதுக்கப்படும் போது பெண்களின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்படும்.

ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போதும் பெண்களுக்கான வட்டார ஒதுக்கீடு சுழர்ச்சி முறையில் இடம்பெறலாம் எனவும், மாறாக 25 வீத இடஒதுக்கீடு என்ற வகையில் மேலதிக பட்டியலில் நியமிப்பது பெண்களின் எண்ணிக்கையை காட்டுமே தவிர அரசியல் பிரதிநிதித்துவத்தினை வலுவடையச்செய்யாது

கடந்த உள்ளுராட்சி மண்றத்தேர்தலிலும் கிழக்கு எமது கட்சி மாத்திரமே பெண்களுக்கு தவிசாளர் மாநகர முதல்வர் பதவிகளை வழங்கி பெண்களை கௌரவப்படுத்தியிருந்தது எனவும் குறிப்பிடப்பட்டதுடன், இங்கு கருத்து தெருவித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி சுசிகலா அருள்தாஸ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணி திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் மகளிரை ஒன்றிணைத்து பலமான சக்தியாக பெண்களின் பிரதிநிதித்துவத்தினை பாதுக்காப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருதாகவும் பெண் வேட்பாளர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து தங்களது பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ரீதியான பெண் பிரதிநிதிகள் பிரதேச ரீதியான பெண் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
Next Post
வாகன இறக்குமதி விலையை அறிவித்துள்ள யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா நிறுவனம்

வாகன இறக்குமதி விலையை அறிவித்துள்ள யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.