பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு பாரிய சுமைதாங்கி விமானங்கள் மூலம் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதியிலுள்ள ஹோட்டல்கள், பெற்றோல் நிரப்பு நிலையங்கள், கார் பழுது பார்க்கும் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன்ன.

இதற்கமைய சுமார் 19 ஆயிரம் பேர் ஆவணங்கள் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் முதற்கட்டாக பெருந்தொகையான குடியேறிகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2024 ஜூலை 5 முதல் 2025 ஜனவரி 31 வரை 5,074 கட்டாய நாடு கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.