அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குடும்ப உறுப்பினர்கள் மாணவர் வீசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், புலம்பெயர்ந்த சமூகத்தால் அவுஸ்திரேலியர்கள் தங்கள் பல சலுகைகளை இழக்கும் சூழ்நிலை தற்போது இருப்பதாக One Nation கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.