ரோமில் இருந்து ஜேர்மனிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ரயானேர் விமானத்தின் இயந்திர பகுதியில் பூனை ஒன்று பதுங்கியிருந்தமை காரணமாக, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
கடந்த வாரம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பதுங்கியிருந்த இந்தப் பூனையை அடையாளம் காண, குறித்த போயிங் 737 விமானத்தின் பல பகுதிகள் அகற்றப்பட்டன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-550.png)
இதன்போது, மின்சார பரிமாற்றப் பகுதிக்குள் குறித்த பூனை மறைந்திருப்பதை பணியாளர்கள் கண்டறிந்தனர். பின்னர், அந்த பூனை, விமானத்தின் இயந்திர உட்பகுதிக்குள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தது.
இறுதியில், இரண்டு நாட்களுக்கு பின்னர் திறந்திருந்த கதவின் ஊடாக, பூனை விமானத்திலிருந்து வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கியது.
இந்தநிலையில், குறித்த பூனை கண்டறியப்படாவிட்டால், 30,000 அடி உயரத்தில் இந்த விமானம் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விமானத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.