கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை எந்தவொரு கட்சிக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் சுனில் வட்டகல வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் எங்களது கட்சியே கூடுதல் ஆசனங்களை வென்றுள்ளது. எந்தக் கட்சியும் அதற்குப் பக்கத்தில் கூட வர முடியாது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஏனைய தரப்புகளில் தெரிவாகியுள்ள ஒருசில உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், எந்தவொரு கட்சியையும் சேர்த்துக் கொண்டு மாநகர சபை நிர்வாகத்தைக் கைப்பற்ற நாங்கள் தயாரில்லை.
அதேநேரம், எந்தவொரு கட்டத்திலும் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை வேறு எந்தவொரு தரப்புக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.