மாத்தளை, கலேவெலவில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-561.png)
ஹோட்டல் ஒன்றின் உரிமத்தை புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.