Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலையம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் 23338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள்.

1638 ஆசிரியர்கள் எமது கல்வி வலயத்தில் கல்வி புகட்ட வேண்டும். அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணிதபாட ஆசிரியர்கள், விஞ்ஞானபாட ஆசிரியர்கள், ஆங்கிலமொழி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்டு வருகின்றன.

என பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவாதனந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கழமை(15) செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம். ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக வேண்டி மாத்திரம் 212 ஆசிரியர்களின் தேவை எமது வயலயத்தில் இருக்கின்றது. அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலையம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் இதற்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்தார்.

இதன்போது கல்வில் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவிவரும் அரசாங் அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
கதிர்காம பொது பேருந்து நிலையத்திலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

கதிர்காம பொது பேருந்து நிலையத்திலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.