இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளுடன் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களின் அடிப்படையில், பொருட்களின் உண்மையான விலையை விட அதிகமாக வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க முடியாது எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக மேலதிக கட்டணம் அறவிடப்பட்டால், வாடிக்கையாளர்கள் கட்டாயம் அதிகாரப்பூர்வ ரசீதைப் பெற்றுக்கொண்டு, தங்களது அட்டை வழங்கிய வங்கியிடம் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அதன் மூலம் மேலதிகமாக அறவிடப்பட்ட தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.







