இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக பயணப் பெட்டிகளில் மறைத்து 64 புறாக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு சுங்கப் பிரிவினர் ரூ.5 இலட்சம் தண்டப்பணம் விதித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 பயணப் பெட்டிகளை சோதனையிட்டபோது, 12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் ரூ.34.31 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிருடன் இருந்த புறாக்களை மீண்டும் இத்தாலிக்கு அனுப்ப சுங்கம் உத்தரவிட்டுள்ளது.








