ரஷ்ய பியர் கம்பனி ஒன்று தனது பியர் கான்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பியர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட். மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பியர் கான்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த பியர் கான்களில் மகாத்மா G என்றும் எழுதப்பட்டிருக்கிறது. மது அருந்துவதற்கு எதிரான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் இதுவென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த பியர் கான்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்றுமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்.