யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர்.

பெப்ரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தது.

இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
