Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை; அஜித் கே. திலகரத்ன தெரிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை; அஜித் கே. திலகரத்ன தெரிவிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தகர்த்தெறிந்துள்ளார் என அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை அரச ஊழியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். எனினும், முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது.

அரச ஊழியர்களை ஏமாற்றும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி ஒரு மனதாக அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த இலக்கை அடையவே பெரும்பாலான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர்.

ஆனால், அந்த நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது. இது அரச ஊழியர்களுக்கு மிகப்பெரிய அடியாக நாங்கள் பார்க்கின்றோம்.

அரச ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பள உயர்வினையே இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இது அரச ஊழியர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத் தொகையை நாங்கள் ஏற்கவில்லை.

எனவே, அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தேவை. அப்படி இல்லையென்றால், நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
Next Post
மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு