ரஷ்யாவின் சிறப்பு உளவுப் பிரிவு ஒன்று மேற்குலக நாடுகளில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகளில் சதி நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருவதாகவும் மேற்குலக புலனாய்வுப் பிரிவுகள் விடுத்துள்ள எச்சரிக்கைகள்- ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
புட்டின் களமிறக்கியுள்ள அந்த சிறப்பு உளவுப் பிரிவு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எச்சரிக்கையையும் மேற்குலப் புலனாய்வுப் பிரிவுகள் வெளியிட்டுள்ளன.