சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை கை மற்றும் கால்களில் விலங்கிட்டு வெளியேற்றும் காணொளியொன்றை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை தனது எக்ஸ்(x) பக்கத்தில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றார்.

மேலும், நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்,இதுவரை 332 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து கைகால்களில் சங்கிலிகளுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள காணொளியில் , சியாட்டிலில் இருந்து கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி மக்களை விமானத்தில் ஏற்றும் 41 விநாடி காட்சிகள் இடம்பிடித்துள்ளன.
வெள்ளை மாளிகையின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அரசு செயல்திறன்துறை தலைவர் எலான் மஸ்க்(Elon musk), வாவ் என்று நகைச்சுவை கலந்த பாணியில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.