வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் குறித்து கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின்நேற்றைய (19) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய சம்பள அதிகரிப்பின்படி, அடிப்படை சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும்.

இருப்பினும், வைத்திய அதிகாரிகளுக்கான கூடுதல் நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் மொத்த சம்பள அதிகரிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அத்துடன், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் வைத்திய அதிகாரிகளின் சம்பளம் அதிகமாக இருக்கும்.
மேலும், ஆரம்ப நிலை வைத்திய அதிகாரியின் அடிப்படை சம்பளம் 26,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.